Thiruvoymozhi 1-6

திருவாய்மொழி

முதல் பத்து

ஆறாம் திருவாய்மொழி

பரிவதில் ஈசனைப் பாடி * விரிவது மேவலுறுவீர் *

பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் * புரிவதுவும் புகை பூவே.             1.6.1

மதுவார் தண்ணந் துழாயான் * முதுவேத முதல்வனுக்கு *

எது ஏது? என்பணி ? * என்னா ததுவே, ஆட்செய்யு மீடே.       1.6.2

ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே *

பாடும் என் நா அவன் பாடல் * ஆடும் என் அங்கம் அணங்கே.           1.6.3

அணங்கென ஆடும் எனங்கம் * வணங்கி வழிபடும் ஈசன் *

பிணங்கி அமரர் பிதற்றும் * குணங்கெழு கொள்கையினானே.       1.6.4

கொள்கை கொளாமை இலாதான் * எள்கல் இராகம் இலாதான்*

விள்கை விள்ளாமை விரும்பி * உள் கலந்தார்க்கு ஓரமுதே.       1.6.5

அமுதம் அமரர்கட்கீந்த * நிமிர்சுடர் ஆழி நெடுமால் *

அமுதிலும் ஆற்ற இனியன் * நிமிர்திரை நீள் கடலானே.      1.6.6

நீள்கடல்சூழ் இலங்கைக் கோன் * தோள்கள் தலை துணி செய்தான் *

தாள்கள் தலையில் வணங்கி * நாள்கடலைக் கழிமினே.       1.6.7

கழிமின் தொண்டீர்கள் ! கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால் *

வழிநின்ற வல்வினை மாள்வித்து * அழிவின்றி ஆக்கம் தருமே.            1.6.8

தரும், அவரும் பயனாய * திருமகளார் தனிக்கேள்வன் *

பெருமையுடைய பிரானார் * இருமை வினை கடிவாரே.     1.6.9

கடிவார் தீய வினைகள் * நொடியாரும் அளவைக்கண் *

கொடியா அடுபுள் உயர்த்த * வடிவார் மாதவனாரே.           1.6.10

மாதவன் பால் சடகோபன் * தீதவமின்றி உரைத்த *

ஏதமில் ஆயிரத்து, இப்பத்து * ஓத வல்லார் பிறவாரே.      1.6.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.