Thiruvoymozhi 1-4

திருவாய்மொழி

முதல் பத்து

நான்காம் திருவாய்மொழி

 

அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய் ! * நீயும் நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆவா என்று எனக்கருளி *

வெஞ்சிறைப் புள்ளுயர்த்தாற்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால் *

வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ?          1.4.1

 

என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய் *

என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே ? *

முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் *

முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ ? விதியினமே.     1.4.2

 

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் ! *

மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு *

மதியிலேன் வல்வினையே மாளாதோ? என்று * ஒருத்தி

மதியெலாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.        1.4.3

 

என் நீர்மை கண்டிரங்கி இது தகாதென்னாத *

என் நீலமுகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ ? *

நன்னீர்மை யினியவர் கண் தங்காதென்றொருவாய்ச்சொல் *

நன்னீலமகன்றில்காள் ! நல்குதிரோ? நல்கீரோ?           1.4.4

 

நல்கித் தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே *

நல்கத் தானாகாதோ நாரணனைக் கண்டக்கால் *

மல்கு நீர்ப் புனற்படப்பை இரை தேர் வண் சிறுகுருகே ! *

மல்குநீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே.      1.4.5

 

அருளாத நீர் அருளி அவராவி துவரா முன் *

அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாளென்று *

அருளாழி யம்மானைக் கண்டக்கால், இது சொல்லி

அருள் * ஆழி வரி வண்டே ! யாமும் என் பிழைத்தோமே ?        1.4.6

 

என்பு இழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்ற(து) *

என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு *

என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல் *

என்பு இழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே?         1.4.7

 

நீயலையே ? சிறுபூவாய் ! நெடுமாலார்க்கு என் தூதாய் *

நோயெனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய் *

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் * இனி உனது

வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.        1.4.8

 

நாடாத மலர் நாடி நாள் தோறும் * நாரணன் தன்

வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று *

வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ? *

ஊடாடு பனி வாடாய் ! உரைத்து ஈராய் எனதுடலே.              1.4.9

 

உடலாழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க் *

கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் *

அடலாழி யம்மானைக் கண்டக்கால், இது சொல்லி *

விடல் ஆழி மடநெஞ்சே ! வினையோம் ஒன்றாமளவே.         1.4.10

 

அளவியன்ற ஏழுலகத்தவர் பெருமான், கண்ணனை *

வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன், வாய்ந்துரைத்த *

அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் * இப்பத்தின்

வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.   1.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.