[highlight_content]

Thiruvoymozhi 1-9

திருவாய்மொழி

முதல் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் *

யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் *

அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் *

சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே.             1.9.1

சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத்து உலகைக் *

கேழலொன்றாகி யிடந்த கேசவன் என்னுடை அம்மான் *

வேழ மருப்பை யொசித்தான் விண்ணவர்க்கு எண்ணலரியான் *

ஆழ நெடுங் கடல் சேர்ந்தான், அவன் என்னருகலிலானே.         1.9.2

அருகலிலாய பெருஞ்சீர் அமரர்களாதி முதல்வன் *

கருகிய நீலநன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் *

பொரு சிறைப் புள் உவந்தேறும் பூமகளார் தனிக் கேள்வன் *

ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன், என்னோடு உடனே.      1.9.3

உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்

மடமகள் * என்றிவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே *

உடனவை யொக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் * எம்மான்

கடல்மலி மாயப் பெருமான் கண்ணன், என் ஒக்கலையானே.         1.9.4

ஒக்கலை வைத்து, முலைப் பாலுண்ணென்று தந்திட வாங்கிச் *

செக்கஞ் செக அன்று அவள் பால் உயிர் செக, உண்ட பெருமான் *

நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக *

ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சினுளானே.     1.9.5

மாயன், என்னெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்கும் அஃதே *

காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே *

சேயன் அணியன், யவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லன் *

தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே.           1.9.6

தோளிணை மேலும், நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் *

தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழாயுடை யம்மான் *

கேளிணை யொன்றுமிலாதான் கிளரும் சுடரொளி மூர்த்தி *

நாளணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவினுளானே.          1.9.7

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம் *

ஆவியும் ஆக்கையும் தானே அளிப்போடு அழிப்பவன் தானே *

பூவியல் நால் தடந்தோளன் பொருபடையாழி சங்கேந்தும் *

காவி நன்மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுளானே.         1.9.8

கமலக்கண்ணன் என்கண்ணினுள்ளான் காண்பன் அவன்கண்களாலே *

அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி *

கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி *

அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என்நெற்றியுளானே.     1.9.9

நெற்றியுள் நின்று என்னையாளும் நிரைமலர்ப் பாதங்கள் சூடி *

கற்றைத் துழாய் முடிக், கோலக் கண்ணபிரானைத் தொழுவார் *

ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் *

மற்றை யமரரும் எல்லாம், வந்து எனது உச்சியுளானே.     1.9.10

உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக், கண்ணபிராற்கு *

இச்சையுள் செல்ல உணர்த்திய வண்குருகூர்ச் சடகோபன் *

இச்சொன்ன ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து எம்பிராற்கு *

நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள்கழல் சென்னி பொருமே.        1.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.