Thiruvoymozhi 1-5

திருவாய்மொழி

முதல் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

வளவேழுலகின் முதலாய வானோரிறையை * அருவினையேன்

களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா ! என்பன் * பின்னையும்

தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் *

இளவேறேழும் தழுவிய எந்தாய் ! என்பன், நினைந்து நைந்தே.    1.5.1

நினைந்து நைந்து உள் கரைந்துருகி இமையோர் பலரும் முனிவரும் *

புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி, வணங்கினால் *

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே ! *

மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ ? மாயோனே !         1.5.2

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் *

நீ யோனிகளைப் படையென்று நிறை நான்முகனைப் படைத்தவன் *

சேயோன் எல்லாவறிவுக்கும் திசைகளெல்லாம் திருவடியால்

தாயோன் * எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன், தானோருருவனே.          1.5.3

தானோருருவே தனி வித்தாய்த் தன்னில் மூவர் முதலாய *

வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த் *

தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் *

வானோர் பெருமான் மாமாயன் வைகுந்தன் எம்பெருமானே.       1.5.4

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் ! மாதவா !*

கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் ! கோவிந்தா ! *

வானார் சோதி மணிவண்ணா ! மதுசூதா ! * நீயருளாய், உன்

தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே.        1.5.5

வினையேன் வினைதீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!*

மனை சேர் ஆயர் குலமுதலே ! மாமாயனே ! மாதவா !*

சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் ! சிரீதரா ! *

இனையாய் ! இனைய பெயரினாய் ! என்று நைவன் அடியேனே.             1.5.6

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக் *

கடிசேர் தண்ணந்துழாய்க் கண்ணிபுனைந்தான் தன்னைக் கண்ணனைச்*

செடியா ராக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை *

அடியேன் காண்பா னலற்றுவன் இதனில் மிக்கு ஓரயர்வுண்டே ?             1.5.7

உண்டாய் உலகேழ் முன்னமே உமிழ்ந்து * மாயையால் புக்கு

உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலை எய்தி *

மண் தான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க் காகும் பீர் * சிறிதும்

அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே !       1.5.8

மாயோம், தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத் *

தூய குழவியாய், விடப் பால் அமுதா அமுது செய்திட்ட

மாயன் * வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன், எவ்வுயிர்க்கும்

தாயோன் * தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.          1.5.9

சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்துத் *

தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் *

ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேலளவிறந்து *

நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றினுயிராம், நெடுமாலே !    1.5.10

மாலே! மாயப்பெருமானே! மாமாயனே! என்றென்று *

மாலேயேறி மாலருளால் மன்னு குருகூர்ச்சடகோபன் *

பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்

பாலேபட்ட * இவை பத்தும் வல்லார்க்கு, இல்லை பரிவதே.       1.5.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.