Thiruvoymozhi 1-10

பத்தாம் திருவாய்மொழி

பொருமா நீள்படை, ஆழிசங்கத்தொடு *

திருமா நீள்கழல், ஏழுலகும் தொழ *

ஒரு மாணிக் குறளாகி, நிமிர்ந்த * அக்

கருமாணிக்கம், என் கண்ணுள்ளதாகுமே.              1.10.1

கண்ணுள்ளே நிற்கும், காதன்மையால் தொழில் *

எண்ணிலும் வரும், என் இனி வேண்டுவம்? *

மண்ணும் நீரும், எரியும் நல் வாயுவும் *

விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.      1.10.2

எம்பிரானை, எந்தை தந்தை தந்தைக்கும்

தம்பிரானைத் * தண்தாமரைக் கண்ணனை *

கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை *

எம்பிரானைத் தொழாய், மட நெஞ்சமே !            1.10.3

நெஞ்சமே! நல்லை நல்லை! உன்னைப் பெற்றால்

என்செய்யோம் ? * இனி, என்ன குறைவினம் ?*

மைந்தனை, மலராள் மணவாளனைத் *

துஞ்சும் போதும், விடாது தொடர் கண்டாய்.       1.10.4

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று * ஓர்

எண் தானும் இன்றியே, வந்தியலுமாறு *

உண்டானை உலகேழும், ஓர் மூவடி

கொண்டானைக் * கண்டு கொண்டனை நீயுமே.            1.10.5

நீயும் நானும், இந்நேர் நிற்கில் * மேல் மற்றோர்

நோயும் சார்கொடான், நெஞ்சமே ! சொன்னேன் *

தாயும் தந்தையுமாய், இவ்வுலகினில் *

வாயும் ஈசன், மணிவண்ணன், எந்தையே.            1.10.6

எந்தையே ! என்றும், எம்பெருமான் ! என்றும் *

சிந்தையுள் வைப்பன், சொல்லுவன் பாவியேன் *

எந்தை ! எம்பெருமான் ! என்று வானவர் *

சிந்தையுள் வைத்துச் சொல்லும், செல்வனையே.        1.10.7

செல்வ நாரணனென்ற சொல், கேட்டலும் *

மல்கும் கண்பனி, நாடுவன், மாயமே *

அல்லும் நன்பகலும், இடைவீடின்றி

நல்கி * என்னை விடான் நம்பி நம்பியே.            1.10.8

நம்பியைத், தென் குறுங்குடி நின்ற * அச்

செம்பொனேய் திகழும், திருமூர்த்தியை *

உம்பர் வானவர் ஆதி அஞ்சோதியை *

எம்பிரானை, என் சொல்லி மறப்பனோ ?       1.10.9    திருக்குறுங்குடி

மறப்பும் ஞானமும், நானொன்றுணர்ந்திலன் *

மறக்குமென்று, செந்தாமரைக் கண்ணொடு *

மறப்பற, என்னுள்ளே மன்னினான் தன்னை *

மறப்பனோ? இனி, யான் என் மணியையே.        1.10.10

மணியை, வானவர் கண்ணனைத் தன்னதோர்

அணியைத் * தென் குருகூர்ச் சடகோபன் சொல்

பணிசெய் * ஆயிரத்துள், இவை பத்துடன்

தணிவிலர் * கற்பரேல், கல்வி வாயுமே.         1.10.11

***********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.