ஶ்ரீஸ்வாமி வடிவழகுக் கட்டியம்

ஶ்ரீமதே ராமானுஜாய நம:

ஶ்ரீஸ்வாமி வடிவழகுக் கட்டியம்

நாயிந்தே, நாயிந்தே!

காஷாயஶோபி கமநீய ஶிகாநிவேஶம்

தண்டத்ரயோஜ் ஜ்வலகரம் விமலோபவீதம்

உத்யத்திநேஶ நிபம் உல்லஸதூர்த்த்வ புண்ட்ரம்

ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருஶோர்மமாக்ரே ।।

அப்பனுக்குச் சங்காழி அளித்தருளும் பெருமாள்!

அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்த பெருமாள்!

அறுசமயச் செடியதனை அடியறுத்த பெருமாள்!

அருளாழி வரிவண்டே என்று ஆழ்வார் அழைக்கும் பெருமாள்!

அருள்மாரி அடியிணைக்கீழ் அன்புபூண்ட பெருமாள்!

அஞ்சுகுடிக்கொரு சந்ததியாம் ஆண்டாள் தமக்கும் அண்ணரான பெருமாள்!

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் தாழ்வின்றி வாழும் பெருமாள்!

அடியார் வினைத்தொடரை அருளென்னும் ஒள்வாள் உருவி கிட்டிக்கிழங்கொடு வெட்டிக்களைந்த பெருமாள்!

நம் தேசிக சிகாமணிப் பெருமாள்!

தேவரீர் திருவடித் தாமரைகள் தாஸ்யார்ஹ ஸ்வாரஸ்ய தாநார்த்தமாக ஆஸநாரவிந்தத்தில் அழுந்தியிட்ட இடது கழலும்,

இடத்தொடையின்மேல் வளர்த்திக் கண்ணாரக் கண்டு களிப்பதோர் காதலுற்றார்க்குக் காட்டியிட்ட வலது கழலும்,

ஸாக்ஷாத் மன்மத மன்மதாயமான மதுமதன விஜய தூணீரயுகளம் போல் இணைத்துவைத்த கணுக்கால்களும்,

கீழ்நோக்குமொளி வெள்ளம் மறியுண்டு சுழித்தாற்போல் இரண்டருகும் திரண்டுருண்ட மடியுண்ட முழந்தாள்களும்,

கந்தளித கதளீகாண்டகரிகர கரபங்கள்போல் அதிம்ருதுல மாம்ஸதளங்களாய் விளங்குகின்ற திருத்துடைகளும்,

ஸந்த்யா ரஞ்சித ஶாரதாப்ரத்தில் தனித்தெழுந்ததோர் கொடிமின்னல் நிலைநின்று படர்ந்தாப்போல் ஆஜங்கம் தழைத்துடுத்த அரைச்சிவந்த ஆடையின்மேல் வளைந்துவந்து நிகுநிகுவென்ற பொன்னரை நாண் பூண்டவழகும்,

ஸேவாரஸனாச பரிப்ராமித மதிமந்தார மாமத்யமான ஸௌந்தர்ய துக்த ஸிந்தூதரம் நெடுக்குழித்திட்ட சுழிபோல் ஸுந்தரமாம் உந்திமலரும்,

மஞ்சுலதர மாயூரோசீர வாலவ்யஜன வேவீஜ்யமான திவ்ய தூப குங்குமித மந்த கந்தவஹ தோதூயமான திவ்ய லாவண்ய தரங்கிணீ தரங்கங்கள் போல் இருபாலும் திகழ்கின்ற திருவளிகளும்,

அபிநவதர தரவிகஸ்வர ஸரஸிஜவர முகுளதளத்தளாயமான நிஜாஞ்சலி ஶிகாங்குளீ சோபையை நிஜஹ்ருதய ஜலஜதரள ரஸிகஹார்த ஜநார்தனனுக்கு அபிநயித்துக் காட்டுவதுபோல் நெஞ்சுக்கு நேராகக் கொஞ்சம் சாய்த்து அஞ்சலித்த தடக்கைகளும்,

தங்கவளைமேல் தங்கி தொங்குகின்ற சங்கிலிகளோடு இணக்கமுற்ற கணைக்கைகளும்,

முறுக்கியிட்ட முன்கையோடு உள்விம்பிப்புறம்குவிந்து மடியுண்ட முழங்கைகளும்,

கனகமய குலதரங்கள் கடைந்தெடுத்து மடுத்தாற்போல் திரண்ட நீண்ட பாஹுதண்டங்களும்

வைகுண்டாதி ப்ரஹ்ம கோஷங்கள் வந்திருக்கும் மாணிக்கப் பண்டாரமான நெஞ்சமாகிய நீணகர்க்கோர்கனகமய கவாடம்போல் பளபளவென்று அகன்று காடவ்யூடமாய் திகழ்கின்ற திருமார்பினழகும்,

அம்மார்பினழகில் ஆழங்கால் பட்டு மயங்கிவிழும் மனோநயநங்கள் தோளளவில் துவக்கவிடும் அவலம்ப ஸூத்ரம்போல் இலங்குகின்ற முந்நூலழகும்,

ஶேஷ்வர விபூதி த்வயமும், இளைப்பாரும் நிழல் தடமாய் வளர்ந்துயர்ந்த திண்டோள்களும்,

கண்டவ்யக்த தாராக்ஷரங்கள் புறம்பொசிந்து காட்டினாற்போல் ரேகாத்ரய விபக்தாங்கமாய் வலம்புரியின் சுழியொழுங்கைப் பழித்தெழுந்த கழுத்தினழகும்,

மருக்கழத்தின சந்திர மண்டலத்தையும் அப்போதலர்ந்த செந்தாமரைப் பூவையும் அதிகரித்து கிட்டினாரை மையலேற்றி மயக்கும் மாயமந்திரமாய் விளங்குகின்ற ஸ்மயமான முகாரவிந்தமும்,

இசைந்து கனிந்து த்ராக்ஷாத்வயம் போல் வகுப்புண்ட சுபுகவிகாஸமும்,

அதிருசிர பாவ கர்ப்பமானதொரு வார்த்தை சொல்லத் தொடங்கி துடிப்பதுபோல் விளங்குகின்ற திருப்பவளங்களும்

அபிமதன தர்ஶனானந்த வேகத்தால் அர்ச்சாவதார ஸமாதியைக் கடந்து விம்மி வெளிவழிகின்ற அவ்யக்த மதுர மந்தஹாஸ விலாஸமும்,

ஸ்படிகமய முகுர மண்டலங்கள் போல் தளதளவென்ற திவ்ய கபோலங்களும்,

கனகனக மகர குண்டலத்வயத்தால் தழைத்து வளர்ந்து மடிந்து வடிவிட்டு சுருண்டு நீண்டு தோளளவும் தொங்குகின்ற கர்ணபாஶங்களும்,

மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ வென்று மிக்க ஸந்தேஹ ஜனகமான கோலநீள் கொடி மூக்கின் அழகும்,

மிதோபத்த ஶ்பர்த ஸ்புரித சபரத்வந்த்வ லலிதங்களாய் புடைபரந்து மிளிர்ந்து நீண்ட தண்டாமரைக் கண்களும்,

குணோத்கர்ஷ குண்டலிதமான திருச்சார்ங்கம் போல் வளைந்த திருப்புருவ வட்டங்களும்,

அஷ்டமீ சந்த்ர அம்ருதப்ரவாஹங்கள் கற்பகக் கொடியடியில் பெருகிவந்து தேங்கினாற்போல் திருநுதல்மேல் இலங்குகின்ற நாஸிகாமூலத்ருத ஶ்ரீராமாநுஜ தீப்ய திவ்யோர்த்வ புண்ட்ரவிஶேஷமும்,

அதனடுவில் உபயவிபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேக லக்ஷ்மீ விஹார நிக்ஷிப்த பதகமல லாக்ஷாபங்கம்போல் சிவந்து படிந்து விளங்குகின்ற ஶ்ரீசூர்ணரேகையும் உயர்ந்து மலர்ந்த திருமுடியும்,

வளர்ந்து மடிந்துவ்யக்தா வ்யக்தமாய் விளங்குகின்ற திருக்குழலொழுங்கும் சுற்றிச் சுழற்றி குழைத்திட்டு முடித்து தொங்கவிட்ட ஶிகாபந்தமும்,

பின்னெடுத்த பிடரியழகும் திருவநந்தாழ்வான் பின்படம்போல் நடுப்பதிந்து விஶாலமாய் நெறித்திட்ட திருமுதுகும்,

வலவருகில் முன்னாட்டித் தாங்கிட்ட த்ரிதண்டாக்ரமும்,

சீரியதோர் நிதிபோல் திருமுன்பே நோக்கிக்கொண்டு இட்டு வைத்த திருவடி நிலைகளுமாய் இப்போது தேவரீர் திருமஞ்சனம் கொண்டருள எழுந்தருளி இருக்கும் அழகு இது ஏதேனும் சிந்தை மருளோ!

ஜகந்மோஹன மந்த்ரப்ரபாவமோ!, ஸகல ரஸ குளிகா விலாஸமோ!, ஸர்வபோக சிந்தாமணி ப்ரகாஶமோ!, அகில ஜகத் ஸுக்ருத விபாகமோ!, நிகில பல கல்பலதா ப்ரஸரமோ!, ஸமஸ்த ஸம்பத் ஸாம்ராஜ்ய வேஷமோ!, ஸர்வ மங்கள ஸந்தானப்ரஸவமோ!, அகில ஜகஜ்ஜீவன மூலமோ!, அதுலாநந்த கந்தாவதாரமோ!, ஸகலகலா ரஹஸ்ய ஸர்வஸ்வமோ!, ஸர்வேஶ்வர ஆபத்தனமோ!, ஈதெல்லாம் திரண்டெழுந்து கொண்டதோர் வடிவோ!,

இதுமன்றி அப்ரமேய தேஜஸ்ஸோ!, நாங்கள் ஏதொன்றறியா இவ்வழகுடன் தேவரீர் ஊழிதொறும், ஊழிதொறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே, யதிஸார்வபௌமனே, திருமஞ்சனம் கொண்டருளவே

ஜய விஜயீ பவ!

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.